Featured post

Mrs & Mr Movie Review

 Mrs & Mr Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mrs & mr ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vanitha Vijayakumar...

Thursday, 2 December 2021

சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' வில் நடித்திருக்கும்

 மீண்டும் சுஜா வருணி


சிறிய இடைவெளிக்குப் பிறகு  'த்ருஷ்யம் 2' வில் நடித்திருக்கும் சுஜா வருணி

'த்ருஷ்யம் 2' மூலம் கவனம் ஈர்க்கும் சுஜா வருணி

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி. அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார். 'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.






























No comments:

Post a Comment