Featured post

Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team

 Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic...

Wednesday, 29 December 2021

துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா

 துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது ! 


2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது.  தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல  சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான  'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  மனம் மயக்கும் அவரது தோற்றம்  ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு  அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றியது மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் பார்வை மற்றும் குறிக்கோள்  எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பதே ஆகும். இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும்  ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



திரைத்துறையில், நடிகை அமலா பால் தற்போது ஒரே நேரத்தில் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார் - கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல மற்றும் பல திரைப்படங்கள் தயாரிப்பு நிலையில்  வெவ்வேறு கட்டங்களில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பாலிவுட்டில்  ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்ற வலைத் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இத்தொடரின் டீசர் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment