Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Tuesday, 28 December 2021

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில்

 நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின்  டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை ! 



டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில்  வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரமாண்ட படைப்பு “யானை”. 



தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில்  “யானை” படத்தின் குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 



இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக,  இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “யானை” படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை குவித்ததுடன், 2 மில்லியன் பார்வைகளை குறைந்த நேரத்தில்  கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது. 


இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக  இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து, படப்பிடிப்பு நடைபெற்றது.  சென்னையில் சில முக்கிய காட்சிகளும், பழநி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வேடத்தில் நடித்துள்ளார். 

 இசை:பிரகாஷ்குமார்,

ஒளிப்பதிவு:கோபிநாத்,

எடிட்டிங்:அந்தோணி, 

ஆர்ட்:மைக்கேல்,

ஸ்டண்ட்:அனல் அரசு,

நடனம்:பாபா பாஸ்கர்,தினா, 

CEO:G.அருண்குமார்,

இணை தயாரிப்பு:சந்தியா கிஷோர்குமார். 


படத்தின் அனைத்து பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.


No comments:

Post a Comment