Featured post

Gajanna Tamil Movie Review

Gajanna Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gajana ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Vedhika, Inigo Prabhakaran, Chandini, Yogi B...

Thursday, 16 December 2021

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்*

 *நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்*


*திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்*


எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.


கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment