Featured post

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests...

Tuesday, 22 March 2022

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 11 லட்சம் மதிப்பிலான இலவச

 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  11 லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்  நிர்வாக இயக்குனர் டிசிஎச் டாக்டர் ஆர் நாராயணபாபு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சாந்திமலர் ஆகியோர் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தனர்


 22 மார்ச் மற்றும் 23 மார்ச் ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 100 பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



























11 லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்  நிர்வாக இயக்குனர் டிசிஎச் டாக்டர் ஆர்.நாராயணபாபு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சாந்திமலர் மற்றும் பார்ன் டூ வின்  நிறுவனர் வர்ஷா அஸ்வானி ஆகியோர் கலந்து கொண்டனர் தொடங்கி வைத்தனர்

 மேலும்
மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 மற்றும் கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் 31 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து இரண்டு நாள்  இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

 நிகழ்ச்சியின்போது பேசிய சுனில் பஜாஜ் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு அளவீடுகளை மேற்கொண்டனர்.  அவர்களுக்கு 45 நாட்களுக்குள் செயற்கை உறுப்புகள் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்

அரசு மருத்துவ கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி எங்களிடம் 150 பயனாளிகளின் பட்டியலை வழங்கியுள்ளதாகவும்   அதில் குறைந்தபட்சம் 100  பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்க இருப்பதாகவும் 181 நோயாளிகளுடன் தொடங்குவது எங்கள் இலக்கு என்று கூறியவர்

 செயற்கை கால்கள் விலை உயர்ந்தவையாக  இருக்கின்றன  எனினும் செயற்கை கால் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது ஆனால் நிதித் தடையின் காரணமாக அவற்றை வாங்க முடியவில்லை" என்று மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 இன் தலைவர் சுனில் பஜாஜ் கூறினார்.

No comments:

Post a Comment