Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Sunday, 28 August 2022

இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி

 இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில்  தமிழக அரசு  விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் "தாய்மண்ணின் ஈரம்" (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. 

தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். 




விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகரும் நன்றியுரையினை பாவலர் குமாரவேறு அவர்களும் வழங்கினார்கள். பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார்.

நூல் வெளியீட்டில்   ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்

No comments:

Post a Comment