Featured post

BOONIE BEARS: GUARDIAN CODE

 *BOONIE BEARS: GUARDIAN CODE* இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் த...

Thursday 4 August 2022

டேக் கேர் இண்டர் நேஷ்னல்' நடத்தும் விளிம்பு நிலை மக்களுக்கான

 *'டேக் கேர் இண்டர் நேஷ்னல்' நடத்தும் விளிம்பு நிலை மக்களுக்கான          நலத்திட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது!*


”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசு கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அரசு சாரா நிறுவனமான 'டேக் கேர் இண்டர்நேஷ்னல்' தொண்டு நிறுவனம் சேவையாற்றி வருகிறது.






அதன்படி சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களின் கல்வி, உணவு, வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த டேக்  கேர் இண்டர்நேஷ்னல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில்  இன்று காலை நடந்தது.


இந்நிகழ்ச்சிக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் தலையேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட  நடிகரும் சமூக ஆர்வலருமான செளந்தர் ராஜா, லிட்டில் ஃபிளவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான் சேவியர் தங்கராஜ், நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுந்தரபாண்டி,  இந்திய தொழில்துறை தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டி செந்தமிழன், சுதா ஃபவுண்டர்  நிஷா தொட்டா, சாண்ட்விச் ஸ்கொயர் நிறுவனர் தன்வீர், போஸ் க்ளாத்திங் ஃபவுண்டர் உஸ்மான், வாசன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் இயக்குனர் வேனுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.


நிகழ்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தனர்கள் அனைவரையும் டேக் கேர் இண்டர் நேஷ்னல்  நிறுவனத்தின் தலைவர் இப்ராகிம் வரவேற்று பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பயணாளிகள் பலரும் பங்கேற்றனர்.  இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெற விரும்புவோர் 7338786888 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என 'டேக் கேர் இண்டர்நேஷ்னல்' நிறுவனத்தின் தலைவர் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment