Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 18 October 2022

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு,

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்பு பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா அவர்கள் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியதில் 10 லட்சம் ரூபாய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்களிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் பெற்று இந்த ஆண்டு  நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 1002 உறுப்பினர்களுக்கு 15.10.2022, 16.10.2022 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு 18.10.2022

இன்று காலை 10.00 மணியளவில் நடிகர் சங்க வளாகத்தில் நமது சங்க பொருளாளர் திரு.SI.கார்த்தி மற்றும் துணைத்தலைவர் திரு.பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்க்கள் மனோபாலா, தளபதி தினேஷ், M.A. பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் . 






நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க நன்கொடை அளித்தவர்களின் விவரம் பின்வருமாறு.


1. திரு.பூச்சி S.முருகன்- ரூ.  25,000/-

2. செல்வி.கோவை சரளா - ரூ.  10,000/-

3. திரு.ஸ்ரீமன் (எ) சீனிவாச ரெட்டி - ரூ.  10,000/-

4. திரு.நாசர் - ரூ.  50,000/-

5. திருமதி.லதா சேதுபதி - ரூ.  25,000/-

6. திரு.விமல் - ரூ.  25,000/-

7. திரு.கருணாஸ் - ரூ.  30,000/-

8. திரு. மனோபாலா - ரூ.  10,000/-

9. திரு.தளபதி தினேஷ் - ரூ.  10,000/-

10.திரு. விக்னேஷ் - ரூ.  10,000/-  

   11. திரு. V.k. வாசு தேவன் - ரூ. 1001/- 

_______ 


மொத்தம் - ரூ. 2,06,001

  ________


# தென்னிந்திய நடிகர் சங்கம்,

18.10.2022.



No comments:

Post a Comment