Featured post

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மார...

Thursday, 6 October 2022

என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில்

 ”என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது. 

உலக நாயகன் படத்தில் நான் நடனமாடியெதெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் அவர் நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன். ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கும் நான் அதாவது ”பபிதா சிரித்தால் தீபாவளிதான்” என்னும் ரசிகர்கள் நிறைய.


இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது.  அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச்சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்துவாங்க  தயாராக இருக்கிறேன். 





















நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தப்பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்” என்கிறார்.  

பபிதா இரண்டாம் இன்னிங்ஸ் ஆட தயாராகிவிட்டார்.

No comments:

Post a Comment