Featured post

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season

 *Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season* James Cameron’s Avatar: F...

Tuesday, 11 October 2022

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் கையால்

 *இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக  ரசிகர்கள் கையால் வெளியிட்ட பாடல் இணையதளத்தில் 11லட்சம் பார்வையாளர்களை கடந்து பரபரப்பாக 2 மில்லியனை நோக்கி நகர்கிறது*

*கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் 'கயா முயா'விற்கு கிடைத்த வரவேற்பால் மோகன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம்* 

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், 'பவுடர்' படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



மோகன் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை தியாகராய நகரில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழாவில் ஹரா படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவை ஹரா படக்குழு இணைந்து நடத்தியது. 

இந்திய சினிமா வரலாற்றில் ரசிகர்கள் கையால் பாடலை வெளியிட்டது இதுவே முதல் முறை என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

நேற்று முன்தினம் வெளியாகி 13 லட்சம் பார்வைகளை கடந்து பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோகன் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

விரைவில் வெளிவரவிருக்கும் 'பவுடர்' படத்தின் கதையின் நாயகனும் மக்கள் தொடர்பாளருமான நிகில் முருகன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசை அமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி, மற்றும் மோகன் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

#HARAA first single #KayaMuya 🔥 starring #SilverJubileeStar #Mohan hits 1.3 Million + views

ICYMI 

▶️ https://youtu.be/SRljpphGpkc

@khushsundar @iYogiBabu #Charuhasan @manobalam @vijaysrig @onlynikil @leanderleemarty #SPMohanraja #Jayasri @SonyMusicSouth @onlygmedia

#KayaMuya

ஹரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் கோவை எஸ் பி மோகன் ராஜ் தெரிவித்தார். 

ஹரா படத்தில் குஷ்பு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாருஹாசன்,   மனோபாலா ,ஜெயக்குமார் மற்றும் ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ஹரா 

படத்தின் முக்கிய கருத்தாகும்.

லியாண்டர் லீ மார்ட்டி ஹரா படத்திற்கு இசையமைக்கிறார் படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.


விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


No comments:

Post a Comment