Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Wednesday, 29 March 2023

மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய

 *மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய 'ஆதி புருஷ்' படக் குழு*


தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர்.



பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'.‌ இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை டி சீரிஸ், ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர் பூஷன்குமார், கிரிசன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‌ 


மார்ச் 30 ஆம் தேதி ராம நவமி விழா தினத்திலிருந்து 'ஆதி புருஷ்' படத்தின் பிரச்சார பாணியிலான விளம்பர நிகழ்வு தொடங்குகிறது.‌ இதற்காக படக்குழுவினர் மாதா வைஷ்ணவி தேவியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக அந்த ஆலயத்திற்கு சென்றனர். 


இந்த உலகத்தின் தொடக்கம் மற்றும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் மாதா ஸ்ரீ துர்காவின் அருளால் தான் என்பதை குறிப்பிடும் விழா சைத்ர நவராத்திரி. இந்து கலாச்சாரத்தில் மகத்தான முக்கியத்தை கொண்டிருக்கும் இந்த விழா நிகழ்வு, வைஷ்ணவி தேவியின் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேவி மீது அபார நம்பிக்கை கொண்டிருக்கும் தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் படக்குழுவினர், அவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் :ஆதி புருஷ்' திரைப்படத்தின் வெற்றிக்காக ஆசீர்வாதம் பெறும் வகையில் அங்கு சென்றனர். 


இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளில் 'ஆதி புருஷ்' திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று வெளியாகிறது. நன்மை - தீமை இவற்றுக்கு இடையேயான போராட்டத்தில் நன்மை வெற்றி பெறும். இதனை முன்னெடுத்து தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்திற்கு மாதா வைஷ்ணவியின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment