Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Wednesday 22 March 2023

திருமணங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்

திருமணங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தலைசிறந்த திருமண தலமாக மகாபலிபுரத்தை மேம்படுத்த  500க்கும் மேற்பட்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை தியாகராயநகர், ஜி.ஆர்.டி ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜி.ஆர்.டி. ஹோட்டல் தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, மோட்வானே அண்ட் கோ இயக்குனர் ஆதித்யா மோட்வானே, பைசாகி கோஷ்- நிறுவனர் பைசாகி ஃப்ளவர், ராக்கி கன்டாரியா நிறுவனர், ராச்சௌத்சாவ்ஸ்வெட்டிங் ஓவ்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்திவெட்டிங் வோவ்ஸ் இயக்குனர் நந்தினி விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையில், தற்காலத்தில் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பத்தினர் திட்டமிட்ட திருமணங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் இது பல்வேறு மாநிலங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் குஜராத் மக்கள் தமிழ்நாடு பாணியில் திருமணங்களை நடத்த விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார். 




இதனை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் WV கனெக்ட் 2023- நிகழ்ச்சி ஆசியாவின் மிகப்பெரிய தொழில்முறை திருமண மாநாடாக நடைபெற உள்ளது.  குறிப்பாக இம்முறை மகாபலிபுரம் சிறந்த திருமண தலமாக கவனம் பெறுகிறது. ஆடம்பரமான ராடிசன் ப்ளூ டெம்பிள் பே ஹோட்டல் உட்பட சுமார் 50 ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் மகாபலிபுரத்தை  பாரம்பரிய வசீகரத்திற்கான கனவுத் தளமாக அமைக்கிறது. 

ஏப்ரல் 3,4,5 தேதிகளில் நடைபெறும் இந்த திருமண  மாநாட்டில் அபினவ் பகத், பார்த்திப் தியாகராஜன், ரஜ்னிஷ் ரதி, ரிதுராஜ் கண்ணா, விஜய் அரோரா, நெட்பிளிக்ஸ் புகழ் சிமா தபரியா உள்ளிட்டோர் பங்குபெற உள்ளனர்.  அதுமட்டுமல்லாமல், இந்தியாவை ஒரு திருமண இடமாகவும், அது என்ன வழங்க முடியும் என்பதைக் காட்டவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த சர்வதேச திருமண திட்டமிடுபவர்களையும் உச்சிமாநாடு ஈர்க்கிறது.  துருக்கியை சேர்ந்த மெல்டெம் பயாசிட் டெபெலர் , இத்தாலியை சேர்ந்த கேப்ரியல் ரிஸ்ஸி, தாய்லாந்தை சேர்ந்த சாகுல் இன்டகுல், பிலிப்பைன்ஸை சேர்ந்த கிடியோன் ஹெர்மோசா, இலங்கையை சேர்ந்த ஹேமந்த் தட்லானி உள்ளிட்டோர்  இதில் பங்குபெறும் சர்வதேச திருமண திட்டமிடுபவர்கள் ஆவார்கள்.

மாநாடு நடைபெறும் 3 நாட்களில், தொழில்முறை திருமண திட்டமிடுபவர்கள் புதிய திருமண ஏற்பாடு மாற்றத்திற்கான செயல்வடிவதை உருவாக்குவார்கள்.    மஹாபலிபுரத்தில்  திருமண வாய்ப்புகளை  ஆராய்வதற்கும், 600க்கும் மேற்பட்ட திருமணத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான நிறுவனங்கள் காட்சிப்படுத்தப்படவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய உள்ளது.  இதில் பங்கேற்பாளர்கள் 18 மணிநேர மாஸ்டர் கிளாஸில் கலந்து கொள்ளலாம் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களின் ஃபேஷன்களால் ஈர்க்கப்படலாம்.  புகைப்படம் எடுத்தல், உணவு மற்றும் பலவற்றின் சமீபத்திய மாற்றங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்களும் நடைபெற உள்ளது.  

வெட்டிங் ஓவ்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்தி குறிப்பிடும்போது, ஒரு உன்னதமான காரணத்திற்காக ”எங்கள் சமூக முன்முயற்சியில் நடுத்ததர மற்றும் மாற்றுத்திறனாளி ஜோடிகள் 101 பேருக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணங்கள் நடத்தப்பட உள்ளதாக கூறினார். இது சுற்றுலாத் துறையை வளர்ப்பதற்கும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவும் என்று குறிப்பிட்ட அவர்,  இது இந்தியாவிற்கும், கலாச்சார ரீதியாக வேறுபட்ட இந்திய மாநிலங்களுக்கும் திருமணங்களுக்கு விருப்பமான இடமாக மாமல்லபுரத்தை உருவாக்கும் என்றார்.    லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவு மட்டுமல்ல, திட்டமிட்ட திருமணங்களை அணுகுவதற்கு இந்த மங்கள விழா அடித்தளமாக அமையும் என்றும் இது இனி பிரபலங்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்காக மட்டும் இருக்காது, மாறாக சமூகத்தின் மறுபக்கத்தையும் பூர்த்தி செய்யும் என்று கூறிய அவர், பெரும்பாலானோர் இதுபோன்ற தொழில்முறை திட்டமிட்ட திருமணங்கள் உதய்பூர் அல்லது லேக் கோமோ வில் மட்டுமே நடப்பதாக நினைக்கிறார்கள் என்றும், மகாபலிபுரமும் அதற்கு தகுதியான இடமாக அமையும் என்றார்.

வெட்டிங் வோவ்ஸ் இயக்குனர் நந்தினி விஜய் குறிப்பிடும்போது, 101 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பது தட்சிணா மூர்த்தியின் கனவு என்றார். 

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் திருமணம் நடைபெற உள்ள 101 ஜோடிகளில் இருந்து 4 ஜோடிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன

No comments:

Post a Comment