Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Saturday, 25 March 2023

அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி ஐஐஎஃப்எல் ஜீதோ

 *அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி ஐஐஎஃப்எல் ஜீதோ அமைப்பின் பெண்கள் பிரிவு நாடு முழுவதும் ஒரே நாளில் 65 இடங்களில் லட்சக் கணக்கானோர் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் நடத்துகிறது.* 



*10கி.மீ, 5கி.மீ, 3கி.மீ என 3 பிரிவுகளில் நடத்தப்படும் இந்த மாரத்தானில் பங்குபெற இதுவரை சென்னையில் சுமார் 5000 பேரும் நாடுமுழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோரும் முன்பதிவு செய்துள்ளனர். 


இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அமீரக கூட்டமைப்பு உள்ளிட்ட இந்தியர்கள் வாழும்  20 நாடுகளில்  ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரே நாளில் இந்த விழிப்புணர்வு அஹிம்சா மாரத்தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  


‘வாழுங்கள், வாழ விடுங்கள்’ என்ற முழக்கத்துடன், அமைதி மற்றும் அகிம்சைக்காக நடத்தப்படும் இந்த மாரத்தானை சென்னையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக ஐஐஎஃப்எல் ஜீதோ பெண்கள் பிரிவின் ஜஸ்வந்த் முனோத் தெரிவித்துள்ளார்.


 மேலும் அந்த அமைப்பை சேர்ந்த ரமேஷ் துகார், தற்காலத்தில் வன்முறை மற்றும் சகிப்புத் தன்மையின்மையால் நாள்தோறும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எதிராக இந்த அஹிம்சா விழிப்புணர்வு மாரத்தான் நடத்துவதாக கூறினார்.

No comments:

Post a Comment