Featured post

Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy

 Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy investigative thriller produced in Tamil and Telugu by AR ...

Friday 31 March 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின்

 தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் அவர்களின்

70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்  எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"*  என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. 10வது நாள்

நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் *விஜய்சேதுபதி*

பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது


முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது ஆண்டவர்கள், ஆள்கிறவர்கள் பற்றி தெரிய வருகிறது. கண்காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முதலமைச்சர் குறித்த புரிதல் ஏற்பட வேண்டும். அவர்கள் முதலமைச்சர் 70 ஆண்டு அரசியலில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதை அவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். 


இளைஞரணி என்ற ஒரு அமைப்பு இந்தியாவிலேயே திமுகவில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. பெரியார் அண்ணா, கலைஞர் அவர்களுடன் முதல்வர் இருந்தது பெரிய வியப்பாக உள்ளது. 


முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்லஎன்றார்.


 முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் கண்காட்சி பார்க்கும்போது வாரிசு அடிப்படையில் அவர் முதல்வராக வரவில்லை என்பதை தெரிகிறது என்றார்


தனக்கு அரசியல் வர எண்ணம் இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதாரணமாக முதலமைச்சர் வரவில்லை. அவரின் கடின உழைப்பு இருக்கிறது. 


 இன்றைய இளைஞர்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.


எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது.

No comments:

Post a Comment