Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Sunday, 26 March 2023

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும்

 *பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும்  புதிய திரைப்படம் "ரேசர்"*


நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் "ரேசர்"


 ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment)  பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் "ரேசர்".








சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.


இப்படத்தை   "ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்" வழியாக ஜெனீஷ் வெளியிடுகிறார்.


இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ் (எ) Satz Rex.


பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


பரத் இசை அமைத்திருக்கிறார். 


கனியமுதன் அரங்கம் நிர்மாணித்திருக்கிறார். 


சண்டை காட்சிகளை சீனு அமைத்திருக்கிறார்.  


இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, '"திரௌபதி" சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக்  ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த  ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும்  தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே  கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா  என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.


இப்படத்துக்காக பாண்டிச்சேரியில்  பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது.  இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 


மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார். 

*லட்சியத்துடன்  வாழும் ஒவ்வொரு    இளைஞனுக்கும் தன்னம்பிக்கை  தரும் படமாக உருவாகியிருக்கும் 

"ரேசர்" வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment