Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Monday, 9 October 2023

சென்னையில் 'ஜென்டில்மேன் II' படப்பிடிப்பு துவங்கியது

 *சென்னையில் 'ஜென்டில்மேன் II' படப்பிடிப்பு துவங்கியது ;*






மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. 

ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு இன்று  (அக்-9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.

தமிழக  தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் 

டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து  ஆக்‌ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன்,  நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.


எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் #ஜெண்டில்மேன்-ll

படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..” என்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.


தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


கதை ; K.T.குஞ்சுமோன்

இயக்கம் ; A.கோகுல் கிருஷ்ணா

ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்

இசை ; M.M.கீரவாணி

பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து

கலை ; தோட்டா தரணி

படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா

ஒலிப்பதிவாளர் ; தபஸ் நாயக்

ஸ்டண்ட் ; தினேஷ் காசி

நடனம் ; பிருந்தா

ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா

புராஜெக்ட் வடிவமைப்பு ; மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ; C.K.அஜய் குமார்

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

தயாரிப்பு மேற்பார்வை ; சரவண குமார், முருக பூபதி

விளம்பர வடிவமைப்பு ; பவன் சிந்து கிராபிக்ஸ்

விளம்பரம்: மூவி பாண்ட் 



*நடிகர்கள்*  


சேத்தன் 

நயந்தாரா சக்கரவர்த்தி 

பிரியா லால் 

பிராச்சிகா 

சித்தாரா 

சுதா ராணி 

ஸ்ரீ ரஞ்சனி 

சத்யபிரியா 

சுமன் 

அச்சுத குமார் 

மைம் கோபி

புகழ்

படவா கோபி 

முனீஸ்ராஜா 

ராதாரவி 

பிரேம்குமார் 

இமான் அண்ணாச்சி 

வேலா ராமமூர்த்தி 

ஸ்ரீராம் 

ஜான் ரோஷன் 

ஆர் வி உதயகுமார் 

கே.ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர்


*படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள்*


சென்னை, ஹைதராபாத், துபாய், மலேசியா & ஸ்ரீலங்கா.

No comments:

Post a Comment