Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Thursday, 26 October 2023

சூர்யா 43' காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

 *'சூர்யா 43' காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி*









*'சூர்யா 43' லேட்டஸ்ட் அப்டேட்*


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 


சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்  ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் 'சூர்யா 43' படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 


சூர்யா -சுதா கொங்கரா - ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், 'சூர்யா 43' திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.

No comments:

Post a Comment