Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Wednesday, 25 October 2023

அசத்தும் அழகுடன் ரசிகர்களை வசீகரிக்கும் மாளவிகா

 அசத்தும் அழகுடன் ரசிகர்களை  வசீகரிக்கும் மாளவிகா மோகனன்






நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 


'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். 


அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவிகா மோகனன் தனக்கான ரசிகர்களை கவர்வதற்கு பிரத்யேக வழியை பின்பற்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.   அவரது சமீபத்திய புகைப்படங்களில் தன்னுடைய வசீகரமான தோற்றத்தை அவர் பயன்படுத்தும் பாணி வித்தியாசமானதாகவே தெரிகிறது. 


இதனிடையே நடிகை மாளவிகா மோகனன், தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment