Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Wednesday, 1 October 2025

Maria Movie Review

Maria Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sidhu Kumaresan , Vignesh ரவி, Balaji Velan , Sudha Pushpa , Abinaya னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது hari k sudhan . இந்த படம் நெறய international film festival ல premier பண்ணிருந்தாங்க. malaysia , london , italy ல நடந்த film festival ல இந்த படத்துக்கு Best Director, Best Actress, அப்புறம் Best Screenplay awards அ வாங்கிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

இந்த கதை ஒரு christian family ஓட வீட்ல நடக்கற மாதிரி அமைச்சிருக்கு. இந்த family ரொம்ப strict ஆவும் religious ஆவும் இருக்காங்க. இவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கும். அவங்க தான் saishri prabhakaran.  இவங்க  கன்னியாஸ்திரி அ ஆகணும் னு ஆசை படுறாங்க. இருந்தாலும் saishri க்கு  இதுல கொஞ்சம் கூட இஷ்டம் இருக்காது. அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ ஆசை படுறாங்க. ஒரு பக்கம் அவங்களோட parents ஓட எதிர்பார்ப்பு இன்னொரு பக்கம் இவங்களோட ஆசை னு இந்த ரெண்டு விஷயத்துல எது ஜெய்க்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த மாதிரி ஒரு கஷ்டமான subject அ கதையை எடுத்துக்கே நம்ம director அ பாராட்டி ஆகணும். இந்த படம் பாக்கும் போது , உண்மையாவே சுதந்திரம் ன்ற ஒரு விஷயம் இருக்கா ? tradition ன்ற பேர்ல இன்னும் எத்தனை ஆசைகளும் கனவுகளுக்கும் தடை போடா போறாங்க? ன்ற நெறய கேள்விகள் மனுசுக்குல வரும். இதெல்லாம் தாண்டி அவங்களோட ஆசைக்கு ஏத்த மாதிரி வாழக்கையை அமைக்கும் போது அவங்க படுற கஷ்டங்கள் என்னனா ன்றதா ரொம்ப அழகா director எடுத்துட்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். ஒரு பொண்ணு தைரியத்தோட எடுக்கற ஓவுவுறு  முடிவும் empowerment தான் னு சொல்லிருக்காங்க. அதாவுது tradition படி வாழுறதும் சரி பிடிச்ச மாதிரி வாழுறதும் சரி ரெண்டுமே நல்ல முடிவு தான் இருந்தாலும் எப்படி வாழனும் ன்றதா அந்த பொண்ணுதான் முடிவு எடுக்கணும் ன்றது  தான் இந்த படத்தோட core theme னு சொல்லலாம். 


saishri prabhakaran ரொம்ப அருமையா நடிச்சிருக்காங்க. ஒரு பக்கம் parents இவங்க மேல வச்சிருக்க எதிர்பார்ப்பு, தனக்கு பிடிச்ச வாழ்க்கையே வாழ முடியலையே ன்ற கவலை ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். sidhu kumaresan அப்புறம் pavel navageethan ஓட நடிப்பும் அட்டகாசமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. 


ஒரு super ஆனா different ஆனா கதைக்களம் தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment