Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Wednesday, 25 October 2023

ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும், ஆர். பிரேம்நாத் இயக்கத்தில்

 *ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும், ஆர். பிரேம்நாத் இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே'*







ஸ்ரீவாரி பிலிம் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இதன் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்குக்குத் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்.  அந்த வரிசையில் 'காதலே காதலே' திரைப்படம் வர இருக்கிறது. மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை  கதாபாத்திரங்களில் இந்தப் படத்தை ஆர். பிரேம்நாத் எழுதி இயக்குகிறார். ஒரு ஃபீல் குட்டான காதல் கதையான இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 25) காலை பிரம்மாண்டமான  பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


படத்தைப் பற்றி இயக்குநர் ஆர். பிரேம்நாத் கூறும்போது, ​​“அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது. 'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது.  பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.  கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும் மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன். இப்படத்தில் இயக்குநர் இமையம் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


'சீதா ராமம்' படத்தின் ரொமாண்டிக் ஹிட் இசைக்குப் பிறகு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அப்படியான ஒரு இசையைத் தரவுள்ளார். சுதர்சன் கோவிந்தராஜன் (ஒளிப்பதிவு), எம்.எஸ். சாகு (கலை), மற்றும் தியாகு (எடிட்டிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

No comments:

Post a Comment