Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Tuesday, 14 November 2023

பான் இந்திய அளவில் கலக்கும்

பான் இந்திய அளவில் கலக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால்










மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில்  ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது,  கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவருக்கு இந்த தீபாவளி மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. 


பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம்  அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது. 


மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி. 


தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உட்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 


க்யூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். 


இந்த தீபாவளி, நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக,  பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது.






No comments:

Post a Comment