Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Sunday, 5 November 2023

கேக் மிக்ஸிங் செரிமனியை தொடங்கி வைத்த நடிகர் ஜெய்

 *கேக் மிக்ஸிங் செரிமனியை தொடங்கி வைத்த நடிகர் ஜெய்*

*கேக் மிக்ஸிங் செரிமனியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்






கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.


சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5 ஆம் வருட கேக் மிக்ஸிங் செரிமனி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குனர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சேர்மன் ரமேஷ் குமார், நிர்வாக இயக்குனர் குழந்தையன், துணை தலைவர் சந்திரசேகர், கார்பரேட் எஸ்.எம்.பி. இயக்குனர் தேவேந்திரன்  உள்ளிட்ட பார்க் எலன்சா ஓட்டல் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment