Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Friday, 12 April 2024

வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம்

 *'வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!*






'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் 'வார் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். 


ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கு விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வானியும் நடிக்கிறார். படம் 14, ஆகஸ்ட் 2025ல் வெளியாகிறது.

No comments:

Post a Comment