Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Wednesday, 17 April 2024

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்!

 *ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்!*




*'சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர "சூரன்"!*


*சியான் 62' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காணொளி வெளியீடு!*


 'சியான்' விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர "சூரன்" என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள்.


இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர "சூரன்" எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 


சியான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தின் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு  ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு.., தற்போது படத்தின் நாயகனான சியான்  விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, வீர தீர "சூரன்" எனும் படத்தின் டைட்டிலையும், இந்த படத்தில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் காளி எனும் கதாப்பாத்திரத்திற்கான சிறப்பு காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த காணொளியில் சியான் விக்ரமின் திரைத் தோற்றம்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


https://youtu.be/0utMPC7YxDM?si=NwejAWojZmiSL_DW

No comments:

Post a Comment