Featured post

Maria Movie Review

Maria Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maria படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல SaiShri Prabhakaran , Pavel Navageethan , Sid...

Saturday, 31 August 2024

நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு

 நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.






நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை  நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல்  முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அவர்களுக்குப் பன்முனை பராமாரிப்பு, புதுமையான மற்றும் பல்துறை மருத்துவர்களை இணைக்கும் விதமான சிகிச்சை முறை முதலியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது NRCI.  


நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரான மருத்துவர் பொன்னையா வனமூர்த்தி, பக்கவாதம், தலையில் அடிபடுவதால் ஏற்படும் காயம் மற்றும் பிற மோசமான நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றத்தின் மருத்துவச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார். 


டாக்டர் எம்ஜியார் பல்கலைக்கழகத்தின் தூணை வேந்தரான மருத்துவர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி, நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் 5 ஆம் ஆண்டு கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார்.  நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் செயலாளரான மருத்துவர் K. ஸ்ரீதர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதல்முறையாக அமெரிக்காவின் நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டியுடன் இணைவதைப் பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச நரம்பியல் வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். இதில், நரம்பியல் சிகிச்சையில் மேம்பட்ட கண்காணிப்பு குறித்த முன் கூட்டமைப்புப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக நடக்கும், நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கருத்தரங்கில்,  உலகம் முழுவதிலுமிருந்து 400 புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கு, "வளர்ந்து வரும் போக்குகள், விரிவடையும் வாய்ப்புகள், மாறும் கண்ணோட்டங்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment