Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 14 April 2025

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது

 *நடிகர் சூரியின்  “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !!*


Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க,  விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.   




சூரி நாயகனாக  நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 



கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.


விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், திருச்சி   பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார். 


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 



தொழில் நுட்ப குழு விபரம் 


எழுத்து, இயக்கம் - பிரசாந்த் பாண்டியராஜ்

தயாரிப்பு - K குமார் 

தயாரிப்பு நிறுவனம் - Lark Studios 

இசை - ஹேசம் அப்துல் வஹாப் 

ஒளிப்பதிவு - தினேஷ் புருஷோத்தமன்

கலை இயக்கம் - G துரை ராஜ்

படத்தொகுப்பு - கணேஷ் சிவா 

சண்டைப்பயிற்சி - மகேஷ் மேத்யூ 

மக்கள் தொடர்பு - யுவராஜ்.

No comments:

Post a Comment