Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 7 April 2025

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.87% மாணவ

 சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.87% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 41.20 லட்சம் ஊதியத்தில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.




சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக    நடைபெற்றது.


நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வேலை வாய்ப்பு முகாமில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள்.


வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 91.87% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர்.


2025-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 3120 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.


சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் உயர்கல்விக்கான ஆலோசனை குழு மூலம் படித்து வந்த 216 மாணவர்கள் மேற்படிப்புற்காக அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் படிக்கவுள்ளனர். 


கல்லூரியில் படிக்க தேர்வாகியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

                                                                                                   

வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:

1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு 41.20 இலட்சம்

2. சராசரி ஆண்டு ஊதியம் 5.45 இலட்சம்

3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள்

வழங்கப்பட்டன.

4. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் சார்பில் சுமார் 216 மாணவர்கள் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடு மற்றும் இந்தியாவில் மேற்படிப்பை தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

படம் விளக்கம் :- 

சத்யபாமா பல்கலைகழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கியபோது.

No comments:

Post a Comment