Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 14 April 2025

இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர்

 *இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!*



இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய  சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.


மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும்  காட்சி அமைப்புகள் என  — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன.


சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, படம் முழுவதிலும் எமோஷன் மற்றும் ஆக்சன் விஸ்வரூபத்துக்கு இடையே  ஒரு சமநிலையை படம்பிடித்திருந்தார். கலை இயக்குநர் சிவகுமார் ஜி, கேஜிஎஃப் உலகத்தை தத்ரூபமாக உருவாக்குதில் முக்கிய பங்கு வகித்தார்.


இன்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கேஜிஎஃப் உலகை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், கேஜிஎஃப் சேப்டர் 3- மீதான  ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. ராக்கி பாயின் வரலாறு தொடர… அடுத்த அத்தியாயத்திற்காக உலகம் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment