Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Tuesday, 15 April 2025

பிரபுதேவா நடிப்பில் சீனாவில் படமாக்கப்பட்ட " எங் மங் சங் "

 பிரபுதேவா நடிப்பில்  சீனாவில் படமாக்கப்பட்ட " எங் மங் சங் " 






பிரபுதேவா - லட்சுமி மேனன் நடித்துள்ள  " எங் மங் சங் " 

கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது


வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும்,    நடிகர்,  நடிகைகளையும் அறிமுகப்படுத்திய நிறுவனமாக விளங்கிவருகிறது. ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம்  நடிப்பில்  “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”,  ஜெயம்  ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள்  உட்பட   50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடன புயல் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில், “ எங் மங் சங் ” என்ற  படத்தை  தயாரித்துள்ளது. படத்தின்  பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில்   நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில்  தொடங்கி, 1980 இல் நடக்கும் கதை, அப்போது  அங்கு பிரபலமாக இருந்த  குங்ஃபூ கலையை, இந்தியாவில்  இருந்து செல்லும்  மூன்று இளைஞர்கள் அந்த கலையை கற்று,  எங் மங் சங்  என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். அங்கு கற்ற  கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை.


வித்தியாசமான  இந்த கதையை நகைச்சுவையோடு கலந்து இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் அர்ஜுன் எஸ் ஜே.  இவர் தற்போது  அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ குட் பேட் அக்லீ “ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக  லட்சுமிமேனன் நடித்துள்ளார்,  ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும்  இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ் காந்த், பாகுபலி பிரபாகர்  ஆகியோர்  நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் , ஸ்டண்ட் சில்வா, அம்ரிஷ் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளன. அதிரடி சண்டை காட்சிகளும் வித்தியாசமான நடன அசைவுகளும் கலந்து  ஆக்க்ஷன் காதல் கதையாக  “ எங் மங் சங் ” படம்  உருவாகியுள்ளது.  கே.எஸ். சீனிவாசன் அவர்கள் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஃபான் இந்தியா படமாக இந்த ஆண்டின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment