Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Thursday, 30 May 2019

ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் "அய்யா உள்ளேன் அய்யா" படப்பிடிப்பு துவங்கியது


மாபெரும்வெற்றிபெற்றசேரன்பாண்டியன், நாட்டாமைபரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர்.

அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.
குடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து வசங்கள் மூலம் அதற்கு உயிர் கொடுக்கும் வித்தைஅறிந்தவர் இவர்அதனால் தான் சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும் சிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது.
 இவர் இயக்கும் புதிய படத்திற்கு " அய்யா உள்ளேன் அய்யா" என்று தலைப்பு  வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் தனது பேரன் கபிலேஷ் என்பவரை கதா நாயகனாக களம் இறக்குகிறார்.இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரன் என்பவரை களம் இறக்குகிறார். கதா நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.மற்றும் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர் 15 வருடங்களுக்கு முன் சமுத்திரம் பட த்திற்கு  கதை வசனம் எழுதினார்..கே.எஸ் ரவிகுமாரிடம் உதவியாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு  -   சந்துரு 
இசை  -    மகேந்திரன் 
தயாரிப்பு   -    வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஈரோடு செளந்தர்.
படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.


10 ம் வகுப்பு  பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக  இருக்கும் என்பதால் நாயகனாக அறிமுகப் படுத்துகிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் என்பது 10 ம் வகுப்பிலிருந்து  12 ம் வகுப்பு கால கட்டம் தான்..அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்..கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக "அய்யா உள்ளேன் அய்யா" உருவாகிறது என்றார் ஈரோடு செளந்தர்.

No comments:

Post a Comment