Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Saturday, 20 July 2019

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்





'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை  இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட  'சர்வா யோகா' நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா  அரோரா ஆகியோர். இந்த நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர். 

இந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளது சர்வா  நிறுவனம். 

சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா ஆர். தனுஷ்,  '' தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்று கூறினார்.

பாலிவுட் ஃபிட்ஸ்பிரேஷன் மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யா அவர்கள் சர்வா மற்றும் திவா யோகாவுடன் சேர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆர்வம் திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ”

இந்த வளர்ச்சி குறித்து சர்வாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சர்வேஷ் ஷஷி கூறுகையில், “ஐஸ்வர்யா அவர்கள் மனதளவில்  மற்றும் உடலளவிலான ஆரோக்கியத்திற்கு குரல் கொடுப்பவராக  நான் அறிந்திருக்கிறேன், அவர் தென்னிந்தியாவில் திவா யோகாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். "


இந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என  ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ - பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த இரு மாதங்களில்  செயல்படவுள்ளது

No comments:

Post a Comment