Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label Aishwarya Dhanush. Show all posts
Showing posts with label Aishwarya Dhanush. Show all posts

Saturday, 20 July 2019

டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்





'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை  இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட  'சர்வா யோகா' நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைக்கா  அரோரா ஆகியோர். இந்த நிறுவனம் நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர். 

இந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளது சர்வா  நிறுவனம். 

சர்வா மற்றும் திவா யோகா குறித்து பேசிய ஐஸ்வர்யா ஆர். தனுஷ்,  '' தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும். இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்று கூறினார்.

பாலிவுட் ஃபிட்ஸ்பிரேஷன் மலைக்கா அரோரா, “ஐஸ்வர்யா அவர்கள் சர்வா மற்றும் திவா யோகாவுடன் சேர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆர்வம் திவா யோகாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். ஆரோக்கியம் மற்றும் முழுமையான வாழ்க்கை என்று வரும்போது, எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம் இருக்கின்றது, எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் சர்வா மற்றும் திவா யோகா இரண்டையும் வெற்றியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ”

இந்த வளர்ச்சி குறித்து சர்வாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சர்வேஷ் ஷஷி கூறுகையில், “ஐஸ்வர்யா அவர்கள் மனதளவில்  மற்றும் உடலளவிலான ஆரோக்கியத்திற்கு குரல் கொடுப்பவராக  நான் அறிந்திருக்கிறேன், அவர் தென்னிந்தியாவில் திவா யோகாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். "


இந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என  ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ - பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த இரு மாதங்களில்  செயல்படவுள்ளது

Thursday, 29 November 2018

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன்

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது!

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN  கார்னிவல்  விழா நடந்தது!
















திருமதி லதா ரஜினிகாந்த்  இந்த பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது . (Peace For  Children )என்ற அமைப்பினை அனைத்து ஊர்களிலும் தொடங்க இருக்கிறார்கள்..குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையோ எது நடந்தாலும் குழந்தைகள் சேமிப்பு அல்லது காப்பது என்ற பிரிவு உள்ளது .அதில் அவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் நிறுவப்பட உள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,குறைகள்,எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள Peace For Children அமைப்பின் மூலம் தெரிவிக்கலாம். தகவலை தெரிவிக்க troll free நம்பர் மற்றும் முகவரியை தெரிவித்தனர் .இந்த அறிவிப்பு பலகையை திரு ரஜினிகாந்த் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திறந்து வைத்தனர் .  

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,நடிகர் தனுஷ் ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சிம்ரன்,இயக்குநர் எஸ்பி முத்துராமன், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா தனுஷ், பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ், அனிருத் ,கலைப்புலி S தாணு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


The PEACE FOR CHILDREN Initiative by Smt. Latha Rajinikanth for Shree Dayaa Foundation , held at Ramachandra Convention Center , Yeaterday was attended by esteemed guests like Superstar Rajinikanth,Dhanush, Aishwarya R Dhanush, Soundarya Rajini, Anirudh, KalaiPuli  S Thaanu , RAghava Lawrence, Bobby Simha, Karthick Subbaraaj, S.P Muthuraaman,Simran ,Actor Selva .