Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Friday, 30 August 2019

முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!


முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்  எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும்  பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும். 

ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் டீசர் தான். ஒரு ரசிகன் படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மிகச்சரியாக எடுத்துக் கூறுவதாக, ரசிகனை திரைக்கு இழுக்கும் உத்தியாக, படத்தின் அடிப்படையை விளக்குவதாக அமைவது படத்தின் டீசர் தான். அந்த வகையில் மிகச் சிறந்த ஒரு டீசராக அமைந்திருக்கிறது  சமீபத்தில் வெளியான  நடிகர் சிபிராஜின் “ரங்கா” படத்தின் டீஸர். 

60 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய “ரங்கா” படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சகர்களையும், பிரபலங்களையும் ஒரு சேரக் கவர்ந்து பாராட்டுகளை பெற்றுள்ளது. 

“பாஸ் மூவிஸ்”தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா டீஸர் பற்றி கூறியது...
“இதனை நாங்கள்  ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாக கருதுகிறோம். டீஸர் பார்த்துவிட்டு சினிமா நண்பர்கள் தந்த பாராட்டு  இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. அனைத்து பாராட்டும் இயக்குநர் DL வினோத் அவர்களுக்குரியது. இப்படத்தில் அவரது உழைப்பானது, திரைக்கதையிலிருந்து படத்தை உருவாக்கியது வரையிலும், மிகச் சிறப்பானது மேலும் இப்போது டீஸரை அவர் அளித்த விதம்  அபாரமானது. 
 மேலும் இப்படத்தில் ரூபன் அவர்களின் எடிட்டிங்கும், ராம்ஜீவனின் பின்னணி இசையும் அர்வியின் அபாராமான காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக அழுத்தமாக கதையையும்,  கதாப்பாதிரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. இத்தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி வெளியாகப்போகும் டிரெய்லரில் இவர்கள் செய்யப்போகும் அதிசயங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார். 


இப்படத்தை எழுதி இயக்குகியுள்ளார் DL வினோத், நாயகனாக சிபிராஜும் நாயகியாக நிகிலா விமலும் நடித்துள்ளார்கள். சதீஷ் , மோஹ்னீஸ் ரஹீஹா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக

இசை  -  ராம்ஜீவன்

எடிட்டிங் -  ரூபன் 

ஒளிப்பதிவு - அர்வி 

கலை -  அருண் சங்கர் துரை

பாடலகள் -  தாமரை, விவேக், முன்னா சௌஹத் அலி 

சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன். 

உடைகள் - சத்யா NJ, பாரதி BS

மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா 

விளம்பர டிசைன்ஸ் - 24 AM 

ஆகியோர் பணியாற்றுகிறார்கள்

No comments:

Post a Comment