Featured post

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Them...

Wednesday, 28 August 2019

என் நெஞ்சார்ந்த நன்றிகள் -இயக்குநர் ரமணா

நெஞ்சார்ந்த நன்றிகள்... 🙏

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. 

என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும்  சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக, 

இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது.... அதன் விளைவாக 

இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் 

திரு. கிருஷ்ணமூர்த்தி 
( Asst. Commr of police / Traffic investigation/ East range ) 

திருமதி K. ஷோபனா 
( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range )

இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும், 

திரு. பெரோஸ் கான் அப்துல்லா
( Deputy commissioner of police / East Dist . Traffic ) 
என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.

இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் 

என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏

-இயக்குநர் ரமணா

No comments:

Post a Comment