Featured post

பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்'

 பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்' ! சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Founda...

Wednesday, 28 August 2019

திகிலும் காமெடியும் கலந்த படம் மல்லி




முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “
ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாகJVR நடித்துள்ளார்.


ஒளிப்பதிவு     -     PKH தாஸ்
இசை           –     பஷீர்
பாடல்கள்       -     சிதம்பரநாதன், பாண்டிதுரை  
எடிட்டிங்        -     B.S.வாசு
நடனம்         -     நாகேந்திர பிரசாந்த், சுரேஷ்
ஸ்டன்ட்        -     ஸ்டன்ட் சிவு
தயாரிப்பு             -     ரேணுகா ஜெகதீஷ்

கதை, திரைக்கதை,வசனம்இயக்கம்  -  வெங்கி நிலா.
படம் பற்றி இயக்குனர் ...
பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை  ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்?என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும்.  இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு      ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும்.              முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
 மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது என்றார் இயக்குனர் வெங்கி நிலா.

No comments:

Post a Comment