Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Monday, 20 April 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி!

நடிகர் பிளாக் பாண்டி சென்னை மற்றும் தமிழக காவல்துறையினர்காக   கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார்.

இதனைப் பற்றி நடிகர்  பிளாக்பாண்டி கூறுகையில்....




இந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது நமது காவல்துறையும், துப்புரவு தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக  உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.

அவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்த வைரஸை விரட்ட முடியும்  என்பதாலும் "விழித்திரு நண்பா, விலகி  இரு நண்பா" என்ற வரிகளை மையமாக வைத்து ஒரு பாடலை நானும் எனது நண்பன் திரு.ராஜாமுகமதுவும் சேர்ந்து எழுதியுள்ளோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.

இதற்கு உதவிய திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும்  தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திரு. பிரகாஷம் தலைமை காவலர் முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும்  இந்த பாடலை கேட்டு  ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தருமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில் நாம் விலகி கூடுவோம்
நம்மையும் பாதுகாத்து
நம்மை தனிமைப்படுத்தி
நாட்டையும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

ஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment