Featured post

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர்

 யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை " ஸ்கூல் " பட இயக்குனர் R. K. வித்யாதரன் Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R....

Sunday, 19 April 2020

இணையவழிக் கல்வி மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில்

இணையவழிக் கல்வி மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் கற்றல் 
மற்றும் கற்பித்தல் முறைகள்

மாணவர்களுக்காக உரையேடுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பிற 
ஆய்வுப்பொருட்கள் ஆகியவை கல்லூரி வலைத்தளமான 
https://studymaterial.nitt.edu/login.php-இல் பதிவேற்றம் 
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் 
சான்றுகளின் மூலம் அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொண்டு பாடங்களைக் 
கற்றுக்கொள்ளலாம். மேலும், SWAYAM வலைத்தளத்தில் உள்ள சில பாடங்கள் 
மாற்றுப் படங்களாகவும் பரிந்துரை செய்யப்படுகிறது.









இதுதவிர பேராசியர்கள் காணொளிக்காட்சிகள் மூலம் பாடங்களை நடத்துகின்றனர். 
சரியான இணைய வசதி இல்லாத இடங்களில் இவ்வகுப்புகள் பதிவு செய்யப்பட்டு 
அனுப்பப்படுகின்றன.

மேலும் பேராசியர்கள் வாட்ஸ்ஆப், Google Drive போன்ற வலைத்தளங்களையும் 
பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் 
தீர்த்துக்கொள்ளலாம். மேலும், மாணவர்கள் இணையம் மூலம் அசைன்மெண்ட்களை 
அனுப்புகின்றனர். இவை உள மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.

இணையம் மூலம் நடத்த இயலாத ஆய்வுப் படிப்புகளை நிறைவு செய்ய, ஊரடங்கு 
நிறைவடைந்த பின் சில நாட்களுக்கு மாற்று கால அட்டவணைப்படி வகுப்புகள் 
நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இணையம் 
மூலமாகவே தேர்வுகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முடித்தும் ஆய்வு 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் பேராசியர்களிடம் நவீன 
முறைகளில் கற்பிக்க வலியுறுத்தினார். இவை மாணவர்கள் தங்கள் ஊரடங்கு 
நேரத்தை சரியாக செலவிட உதவியாக இருக்கும் எனக் கூறினார். மேலும், இணையவழி 
வகுப்புகள் நடத்த தேவையானவசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் அவர் 
கூறினார்.

No comments:

Post a Comment