Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 22 April 2020

VELAMMALIANS QUALIFIED FOR THE JUNIOR NBA CHAMPIONSHIP


VELAMMALIANS QUALIFIED FOR THE JUNIOR NBA CHAMPIONSHIP (சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசியக் கூடைப்பந்து சங்கம் நடத்திய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் சிறந்த வீரர்களாகத் தேர்வு)


சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசியக் கூடைப்பந்து சங்கம் நடத்திய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் சிறந்த வீரர்களாகத் தேர்வு

தேசியக் கூடைப்பந்து சங்கம் (NBA) சார்பாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் யு-14 பிரிவில், சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியின்  8ஆம் வகுப்பு மாணவர் டி.ஹரிஷ் அரவிந்த், மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் ஆர்.கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி, சிறந்த வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசியக் கூடைப்பந்து சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இவர்கள் இருவரும்  மிக உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 150 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்தப் போட்டியை இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியின் யு-14 பிரிவில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்க இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் திறன் குறித்தும், அவர்கள் அடைந்துள்ள உயர்ந்த நிலை குறித்தும் பள்ளி நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது.  

No comments:

Post a Comment