Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Saturday, 11 April 2020

Tik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்

Tik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்

2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன்.  Three Sum Productions R.பால சுப்ரமணியன், PK ரகுராம் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். படத்தின் இயக்குனர் MP கோபி.





இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, இத்திரைப்படம்  2009 ஆம் ஆண்டு தமிழக அரசின்  மூன்று விருதுகளை வாங்கியது,

சிறந்த நடிகர் கரண்
சிறந்த குணச்சித்திர நடிகர் சரத் பாபு
சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்

இப்படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காக தீனா  இசையில் , சினேகன்  எழுதிய  "பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா" என்ற பாடல்  தற்போது Tik - Tok ல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

ட்ரெண்டிங் காரணம் என்னவென்றால்

1. Corona பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு பெண்கள் Tik Tok செய்கிறார்கள்

2. வெளிநாட்டில் இருக்கும் காதலனை நினைத்து பெண்கள் Tik - Tok செய்கிறார்கள்

3. நிச்சயதார்த்தம் முடிந்த பெண்கள் தன்னுடைய வருங்கால கணவனை நினைத்து உருகி Tik - Tok செய்கிறார்கள்

இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

No comments:

Post a Comment