Featured post

Actor Mohan-starrer ‘Haraa’ audio launched in style

  Actor Mohan-starrer ‘Haraa’ audio launched in style ‘Haraa’ produced by Coimbatore S P Mohan Raj and G Media Jaya Sri Vijay to be released...

Sunday 1 November 2020

அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும்

 அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,


தமிழ்த்தேசிய விடுதலைப்போராளி

மாவீரன் தமிழரசன்

அவர்கள்

தனிப்பெரும் தலைமைப் பண்புடையவராகத் திகழ்ந்தவர்


தன்னைத் தலைவராக எண்ணிக் கொள்ளாத 

தன்னை முன்னிறுத்தக் கொள்ளாத

வியத்தகுத் தலைவனாக வாழ்ந்தவர்.


சாதி ஒழிப்புப் போராளியென   

பட்டம் சுமந்தவரில்லை அவர்.

ஆனால்

மனிதரிடை 

துளியளவு வேறுபாடும்

கொண்டிராத 

மகத்துவ உள்ளத்தோடு அனைவரையும் அணைத்துக் கொண்டார்.



கொள்கைகளுக்காக உயிர்த்தியாகம் செய்வது பற்றி ஊருக்குள் முழங்கியவரில்லை அவர்.


நினைவுகளின் விழிப்புநிலையில்

தன் இருதயத்தை 

தன் கையால் தானே தோண்டியெடுத்து மண் உயிர் பெற வைத்தது போல


மக்கள் விடுதலைக்காக தூக்கிய

துப்பாக்கி கையில் இருந்தபோதும்


அவர் நேசித்த அனைத்து சாதி மக்கள்கூட்டத்தோடு கலந்துநின்ற காவல்துறை கொலைவெறிக் கொண்டு கற்களால் தாக்கியவேளை


எந்த மக்களின் 

விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினேனோ

என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக 

அந்த மக்களுக்கு எதிராக 

அதே ஆயுதத்தை பயன்படுத்தமாட்டேன்

என்று அவர் எடுத்த உறுதியான முடிவால்


தன்மக்கள் முன்பாக

தன்மக்களுக்காகவே

தன்னுயிரை தந்து

மண்ணில் சாய்ந்தார்.


தனது குருதியோடு கலந்திருந்த கொள்கைகளுக்காக 

அவர் சிந்திய குருதி தமிழ்மண்ணோடு

கலந்திருக்கிறது.


தன்னுயிர்த் தந்து

தமிழ்மண்ணுக்கு உயிரூட்டிய

விடுதலைப் பெருநெருப்பாக வாழ்ந்த


தமிழ்தேசிய விடுதலையின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்த 


ஒப்பற்ற போராளி 

மாவீரன்

தமிழரசன் அவர்களின் தாயார்

மானத்தமிழச்சி 

பதூசு அம்மாள் அவர்கள் நேற்று மாலை இயற்கையானார்.


இந்நேரத்தில்,

தன் குடும்பம் 

தன் வாழ்வு என வாழாது

தமிழர் நலனே 

தம் வாழ்வாக கருதி வாழ்ந்த தாயாரின் ஈகவாழ்வைப் போற்றுகிறேன்.


இயக்குநர்

அமீர்

No comments:

Post a Comment