Featured post

Thudarum Movie Review

Thudarum Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மலையாள படமான thodarum படத்தோட review அ தான் பாக்க போறோம். இப்போ லாம்  mohanlal ஓட படங்கள் நாளே fa...

Friday, 20 November 2020

மானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26

 *உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள்*


மானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 



விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


மும்பை, நவம்பர் 20, 2020: மானே நம்பர் 13 திகிலுக்கு தயாராகுங்கள். திகில் நிறைந்த வீட்டில் ஒரு ரோலர் - கோஸ்டர் பயணத்துக்கு உங்களை வரவேற்கிறோம். டேனிஷ் சேட் நடித்த கன்னட நகைச்சுவை திரைப்படமான ஃப்ரெஞ்ச் பிரியாணி மற்றும் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் நடித்த குடும்ப திரைப்படமான பீமசேனா நளமஹாராஜா ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மர்மம் நிறைந்த கன்னட திகில் திரைப்படமான மானே நம்பர் 13-க்கு பார்வையாளர்களை கவர்ந்திழுக்க அமேசாம் ப்ரைம் வீடியோ தயாராகிவிட்டது. இந்த பயமுறுத்தும் திரைப்படத்தின் ஒரு நிமிட டீஸர் வீடியோவை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். நம் அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் திகில், மர்மம் மற்றும் பயம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்துக்கு இந்த டீஸர் அழைத்துச் செல்கிறது. 


மானே எண் 13-ல் சிக்கியுள்ள ஐந்து நெருங்கிய நண்பர்கள், அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய்களின் ஆத்மாக்கள் நிறைந்திருக்கும் திகில் வீட்டிலிருந்து வெளியேற போராடும்போது, என்ன நடக்கும் என்பதைக் கண்டுபிடிக்க தயாராகுங்கள்.


டீஸரை இங்கே காணலாம்,


https://www.instagram.com/p/CHz5oigongE/?igshid=zf80v5qsi5rk


விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள் அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மானே நம்பர் 13-ஐ வரும் நவம்பர் 26ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம்.

No comments:

Post a Comment