Featured post

Mask Movie Review

Mask Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mask படத்தோட review எ தான் பாக்க போறோம். விக்ரமன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Kavin ,  ...

Friday, 8 January 2021

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் "யாமா"

 த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் "யாமா" 


ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் 

திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு  அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார்.  கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். "அங்காடித் தெரு" "அசுரன் " ஆகிய படங்களில் நடித்த   இயக்குனர் 




A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.  இந்நிலையில்"யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மக்களின் ஆதரவு வேண்டும் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment