Featured post

Coolie Movie Review

Coolie Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம coolie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு ஏகப்பட்ட expectation இருந்தது. தொ...

Tuesday, 20 April 2021

பசுமை கருகியதே! மனிதம் மறைந்ததே!

 பசுமை

கருகியதே!

மனிதம்

மறைந்ததே!

பகுத்தறிவை பக்குமாய்

சொல்லும் பண்பு!

சக நடிகனை உயரத்தும்

அன்பு!

மக்களை சிரிக்க வைக்கும்

பல சிரிப்பு நடிகர்களின்

முகத்தில்

சிரிப்பு இருந்ததில்லை,

நீ

சிரித்த முகத்தோடு உள்ள

சிரிப்பு நடிகன்!

அனைவருக்கும்

பிடித்த மனிதனாய் வாழ்வது

ஆபூர்வம்!





அந்த அபூர்வம் நீ!

சம்பள அக்கறையுள்ள நடிகர்கள்

மத்தியில் - நீ

சமுதாய அக்கறையுள்ள நடிகன்!

கலாம் எங்களுக்கு

முன்னாள் ஜனாதிபதி!

உனக்கு அவர்

என்னாளும் தளபதி!

மண்ணில் மரம் நட்டாய்

எங்கள் மனதில்

மனம் நட்டாய்!

நகைச்சுவை நடிகர் என்பதைவிட

உன்னை

கருத்துச்சுவை நடிகர் என்பதே

பொருந்தும்!

விவேகமாய் வளர்ந்தாய்

வேகமாய் மறைந்தாய்!

இறப்புவரை பொறுப்பாய்

இருந்தாய்!

விழி மூடும் முன்னாள்வரை

விழிப்புணர்வு உரைத்தாய்!

வெள்ளித்திரையில்தான் - நீ

நகைச்சுவை நாயகன்

மக்கள் மத்தியில்

என்றும் கதாநாயகன்!

 அடிக்கடி ' எஸ்கேப் எஸ்கேப் '

என்பீரே

இன்று இந்த உலகத்தைவிட்டே

எஸ்கேப் ஆகிவிட்டாய்!

நிலக்கும் என்றும்

உன் புகழ்!

                          * பேரரசு*

No comments:

Post a Comment