Featured post

இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம்

 இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம்   !!  திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி - தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் !! எங்கு திருவள்ளு...

Tuesday, 25 May 2021

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம்

 *ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின்*

*பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்*

*லாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்*

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.







சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.


இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.


டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment