Featured post

28 YEARS LATER Horror Releasing around the world from

 28 YEARS LATER Horror Releasing around the world from June 18, 2025 Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominate...

Sunday, 30 May 2021

தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது

 இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்

தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், 'பிரேம கதந்டா' படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் மகிழ்வித்திருக்கிறார்.

இது டோலிவுட் திரையுலகால் கொண்டாடப்படுகிறது. டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை. 

முன்னதாக, இதேபடத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார். 




இப்படியாக இந்தப் படத்திற்கு பல புதுமைகளை அல்லு சிரிஷ் புகுத்துவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது.

இப்போது அவர் இரண்டு ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் துள்ளல் மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் கிடைக்காதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

’பிரேம கதந்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படம், தற்கால உறவுச்சிக்கல்கள் பற்றி பேசுகிறது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்று அழுத்தமான உணர்வுகளைக் கடத்துவதாகவும், இன்னொன்று நாயகன், நாயகியின் யதார்த்தமான மிரர் செல்ஃபி புகைப்படம் கொண்டதாகவும் உள்ளது.

பிரேம கதந்டா படத்தை ராகேஷ் சசி இயக்கியுள்ளார். படத்தை, GA2 பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அல்லு அரவிந்த படத்தை வழங்குகிறார்.




No comments:

Post a Comment