Featured post

பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்'

 பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்' ! சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Founda...

Wednesday, 25 August 2021

சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து

 *சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த  நடிகர் சசிகுமார்..!*


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள '3சி சென்னை கார்ஸ் கேர்' எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் இன்று திறந்து வைத்தார்.


மேலும் ரோபோ சங்கர், நடிகர்கள் ஹரிஷ் & கயல் தேவராஜ்,  இயக்குநர் மோகன் ஜி ,  இசையமைப்பாளர் ஜூபீன், நடிகை ரேகா நாயர், விஜய் டிவி அஸார் & நவீன், ஆதித்யா டிவி அகல்யா மற்றும் பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.






பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், "ரோகிணி எனக்கு நீண்ட நாள் நண்பர். அவரின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் மேலும் பல கிளைகளை தொடங்கி வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார். 


பின்னர் நிறுவனர் ரோகிணி பேசும் போது,   சசிகுமார் அண்ணன் வந்து திறந்து வைத்து வாழ்த்தியதற்கு நன்றி. பொதுவாகவே ஒவ்வொருவரும் தனது வழக்கமான வேலையுடன் கூடுதல் வருமானம் வரும் மற்றொரு தொழிலை செய்ய வேண்டும். அப்படி யோசித்து தான் கடந்த வருடம் எனது இந்த கார் கேர் நிறுவனத்தை அண்ணன் விஜய் சேதுபதி அவர்களை வைத்து துவங்கினேன். அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கிளையை துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வந்திருந்து வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர் களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி" என்றார்.

No comments:

Post a Comment