Featured post

Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy

 Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy investigative thriller produced in Tamil and Telugu by AR ...

Friday 27 August 2021

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர்

 Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில்,  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ" SIIMA 2020" விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Double Meaning Productions  சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ"  திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான  "SIIMA 2020" திரை விழாவில், 9 பிரிவுகளில்  விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் 'மாயோன்" படம் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், தனது தயாரிப்பில், கடந்த வருடம் மிகப்பெரும் வெற்றி பெற்ற "சைக்கோ" திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றதற்கு, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு இதயம் கனிந்த  நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் இதனை சாத்தியமாக்கிய   "SIIMA 2020" திரை விருது குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார். முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் தான் படத்தின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணமென அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 'மாயோன்' திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி, அவரது இசை படத்தின்  மிகப்பெரும் தூணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


"சைக்கோ" திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்கம் (மிஷ்கின்),  முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( Double Meaning Productions ), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்).  ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment