Featured post

Maaman Movie Review

Maaman Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மாமன் படத்தோட review அ பாக்க போறோம். soori கதை எழுதி prashanth pandiyaraj இயக்கி இருக்கற action தி...

Wednesday, 15 December 2021

ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில்

ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்*


யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் 'ராதே ஷியாம்' திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. 


இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஆகூழிலே' என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' என்கிற மற்றொரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.  


தற்போது மூன்றாவாது பாடலான ‘ரேகைகள்’-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள கண்ணைக் கவரும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. 


ஆர்வத்தை தூண்டும் ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமுடன் பிரபாஸ் ஈடுபட்டுள்ளார். பிரத்யேக வடிவைமக்கப்பட்ட அவரது உடை, காட்சியின் பின்னணி உள்ளிட்டவை பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ரேகைகள்’ பாடலின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. 


'ராதே ஷியாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.


'ராதே ஷியாம்' திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாள்கிறார். தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். 


தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷியாம்' வெளியாகவுள்ளது.


ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. 


*

No comments:

Post a Comment