Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Friday, 23 September 2022

நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்திம் தொழில்நுட்ப குழு மற்றும்

 *நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்திம் தொழில்நுட்ப குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் அறிவிப்பு!*


நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய 'NC22' படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.




ஸ்ரீனிவாசா சித்தூரி 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்'ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இன்னொரு நல்ல செய்தி 'மாஸ்ட்ரோ' இளையராஜாவும், 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா  இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும். 


அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது. 


கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் 'NC22'-ல் அங்கமாக உள்ளார். 


படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்‌ஷன்- எண்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். 


*நடிகர்கள்*: நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்*: 


கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு,

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,

பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,

வழங்குபவர் : பவன் குமார்,

இசை: 'மாஸ்ட்ரோ' இளையராஜா, 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன் ஷங்கர் ராஜா,

ஒளிப்பதிவு: SR கதிர்,

எடிட்டர் : வெங்கட் ராஜன்,

வசனம்: அபூரி ரவி,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,

ஆக்‌ஷன்: யானிக் என், மகேஷ் மாத்யூ,

கலை இயக்கம்: DY சத்யநாராயணா

No comments:

Post a Comment