Featured post

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests...

Wednesday, 21 September 2022

கவின்- அபர்ணா நடிக்கும் 'டாடா' படப்பிடிப்பு நிறைவு!

 *கவின்- அபர்ணா நடிக்கும் 'டாடா' படப்பிடிப்பு நிறைவு!*


ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா நடிக்கும் 'டாடா' படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.




அழகான ரொமாண்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்யும் நோக்கத்தில் பல விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. 


மொத்த படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. 


கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' படப் புகழ் ஹரீஷ், 'வாழ்' படப் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இதில் நடித்திருக்கின்றனர். 


*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*


ஒளிப்பதிவு : எழில் அரசு,

இசை : ஜென் மார்ட்டின்,

எடிட்டிங் : கதிரேஷ் அழகேசன்,

கலை: சண்முகராஜ்,

ஆடை வடிவமைப்பு: சுகிர்தா  பாலன்,

எக்ஸ்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: APV மாறன்,

ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்.

No comments:

Post a Comment